காது கேளாமை மற்றும் அவற்றின் பாதிப்புகள் ?
February 6, 2021தமிழ்நாட்டில் காது கருவி மையம் அமைந்துள்ள இடங்கள் ?
February 6, 2021
நரம்பு சம்பந்தமான காது கேளாமைக்கான தீர்வு ?
நரம்பு சம்பந்தமான
காது கேளாமைக்கு காக்ளியர் இம்பிளான்ட்(Cochlear Implant) எனப்படும் அறுவை
சிகிச்சை முழுத் தீர்வை தருகிறது .இந்த அறுவை சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது .
காக்ளியர் இம்பிளான்ட் மூலம் பொருத்தும் கருவியை ,ஒரு
காதில் மட்டும் நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் பொருத்திக்கொள்ளலாம் . காக்லியர் இம்ப்ளான்ட் மூலம் பொருத்தப்படும் கருவி,
காது கேட்காமல் தடுமாறும் முதியவர்களுக்கு பெரும் பலனை அளிக்கும்
செவித்திறன் நரம்பு பாதிப்பால் காது கேட்கும் திறனானது குறைகிறது. காதின் உட்பகுதியில் உள்ள நரம்பு மண்டலம் (Auditory nerve) பாதிக்கப்படுவதால் ஒருவருக்குச் செவித்திறன் குறைபாடு ஏற்படுகிறது.
பொதுவாக நம் உட்காது பகுதியில் மிகவும் நுண்ணிய முடியைப் போன்ற திசுக்கள் காணப்படுகின்றன. இவை ஓசையை மின்காந்த அலைகளாக மாற்றி மூளைக்குச் செலுத்துகின்றது. இந்தத் திசுக்கள் பாதிக்கப்படும்போதோ அல்லது நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போதோ செவித்திறன் குறைகிறது.
செவித்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு சில சத்தங்கள் மிகுந்த ஒலியுடன் கேட்கக்கூடும். இரண்டு அல்லது மூன்று மனிதர்கள் சேர்ந்து பேசும்போது, அவர்கள் பேசிக்கொள்வதை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். அதிக ஓசை உள்ள இடங்களில் செவித்திறன் குறைவதை நன்கு உணர்வார்கள்.