காது மடல் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படுவதற்கான காரணங்கள் ?
1 .காது மடல்களில் உள்ள ஓட்டையை சுற்றியுள்ள தோலில் அரிப்பு ,புண்,வீக்கம் போன்றவை ஏற்படும்.
காதில் அணியும் அலங்காரத் தோடுகளால் தோலில் அழற்சியானது ஏற்படும் .இவை தங்க தோடுகளை காட்டிலும் அலங்காரத் தோடுகளில் அதிக
அழற்சி ஏற்படுகிறது .
2 .சிலர் காதுப் பகுதியில் சோப்பு போட்டு முகத்தை நன்கு கழுவாமல் விடுவதாலும் அழற்சியானது ஏற்படுகிறது .
3 .சிலருக்கு காது துவாரமானது நாளடைவில் பெரிதாகி ,தோடு கழன்று விழும் அளவிற்கு ஓட்டை பெரிதாகிறது .
4 .காது மடல்களில் அணியும் தோடுகளாலும் ,ஒவ்வாமையாலும் அழற்சி ஏற்பட்டு,அதனால் புண்ணானது பெரிதாகி வீக்கமானது ஏற்படுகிறது .
5.
காது மடல் பிரச்சனைகள் சிலருக்கு
குழந்தை பருவத்திலேயே ஏற்படுகிறது ,அதாவது சதைகள் மடிப்புற்று காணப்படுவது .இது அவர்களுக்கு அழகை கெடுக்கும் வகையில் அமையக்கூடும் .
காது மடல்களில் ஏற்படும் துவாரத்தின் அளவை சிறிதாக்கவும்,ஓட்டையை அடைப்பதற்கும் இலகுவான
சிகிச்சை முறைகளை கடைபிடிக்கலாம் .இதற்கு சத்திரசிகிச்சை முறை நல்ல பலனை அளிக்கும் . இந்த சிகிச்சையை சத்திர சிகிச்சை நிபுணர்களை கொண்டு செய்வதே சாலச் சிறந்தது .