Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    common-problems-in-ear
    காதில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் என்னென்ன ?
    February 11, 2021
    how-to-work-hearing-aid
    காது கருவி எவ்வாறு செயல்படுகிறது ?
    February 12, 2021

    நீந்துவோர் காது நோய்(Otitis Externa) என்றால் என்ன ?

    நீந்துவோர் காது நோய் என்பது செவிக்கால்வாயில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும் .இது பெரும்பாலும் நடுத்தர வயது குழந்தைகளுக்கு ஏற்படும் (அதாவது 7 முதல் 13 வயது ) .இந்த நோய் பொதுவாக கோடைகாலங்களில், குழந்தைகள் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதால் அல்லது குளிப்பதால் (ஏரி,குளம்) ஏற்படுகிறது .நீந்துவோர் காது நோயானது காதிற்கு அதிக வலியை தரக்கூடியது .

    நீந்துவோர் காது நோயால் ஏற்படும் பாதிப்புகள் ?


    1 .நீந்துவோர் காது நோயால் செல்லுலிடஸ் என்றழைக்கப்படும் ஆழமான தோல் தொற்றுநோய் உண்டாகும் .
    2 .நீந்துவோர் காது நோய் ஆனது சில சமயங்களில் மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் .அதாவது காது நரம்புகளுக்கும் மற்றும் மூளைக்கும் மிக பெரிய தொற்றை ஏற்படுத்தும் .
    3.நெக்ரோடைசிங் ஓடிடிஎஸ் எஸ்ட்டேர்னா என்றழைக்கப்படும் ,எலும்பு மற்றும் குருத்தெலும்பு சிதைவு பாதிப்பு ஆனது நீந்துவோர் காது நோயால் ஏற்படக்கூடியதாகும் .
    4 .சில சமயங்களில் நீந்துவோர் காது நோயால் செவிப்புலன் இழப்பு ஏற்படக்கூடும் அபாயம் உள்ளது .
    5 .நீந்துவோர் காது நோயால் நீண்ட கால தொற்றுநோய்கள் ஏற்படலாம் (நீடித்த ஓடிடிஎஸ் எஸ்ட்டேர்னா )

    நீந்துவோர் காது நோய்க்கான சிகிச்சை முறைகள் ?

    1 .நீந்துவோர் காது நோய்க்கு மருத்துவர் ஆலோசனையின் படி அன்டிபையோடிக் மற்றும் ஸ்டேரொயிட் போன்ற காது சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம் .
    2 .நீந்துவோர் காது நோயால் ஏற்படும் காது வலிக்கு அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூபுரோஃபென் போன்ற வலி மருந்துகளை பயன்படுத்தலாம் (மருத்துவரின் ஆலோசனை பெற்று).
    3 .தண்ணீரில் நீந்துவதை மற்றும் தலையை முழுவதுமாக மூழ்குவதை அதிகமாக தவிர்த்தல் நல்லது .
    4 .நீந்தும்போது காது அடைப்பங்களை பயன்படுத்துவதால் ஓடிடிஸ் எக்ஸ்டர்னா மீண்டும் வராமல் தடுக்க முடியும் .