2 .காது கேளாமையை மிகத் துல்லியமாக கண்டறிய பெரா (BERA - Brain stem Evoked Response Audimetry) என்ற
நவீன சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது .பெரா பரிசோதனையானது மின் அதிர்வுகளை ஏற்படுத்தி கண்டுபிடிக்கும் சோதனையாகும் .காது கேளாமையை மதிப்பீடு செய்ய முடியாத நிலையில் ,பெரா பரிசோதனையை பயன்படுத்தி முழு தீர்வைக் காணலாம் .
3 .காது கேளாமையின் குறைபாடுகளின் தரத்தை பொறுத்து ஆடியோ பரிசோதனை, இசைக்கவை பரிசோதனை, பேசி புரிந்து கொள்ளும் பரிசோதனை,
ஒ.எ.இ (Oto Acoustic Emissions)டெஸ்ட் மற்றும் பெரா டெஸ்ட்(BERA) ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சைகளை அளிக்கலாம் .
4 .காது கேளாமையானது எந்த மாதிரியான பாதிப்பு மற்றும் அதன்
பாதிப்பின் தீவிரம் என்ன என்பதை ஒடோஸ்கோப்(Otoscopy) என்ற கருவி மூலம் மிகத் துல்லியமாக அறியலாம் .