நவீன காது கேட்கும் கருவிகள் குறைந்த விலையில் கிடைக்கும் இடங்கள் ?
July 26, 2021கோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முறை..
July 28, 2021
செவியின் இயக்கமுறை அல்லது காது கேட்டலின் இயக்கமுறை ?
புறச்செவியின் இயக்கம்:
வெளிப்புறத்திலிருந்து வரும் ஒலி அலைகள் புறச்செவி குழாய் வழியாகச் செவிப்பறையை சென்றடைகின்றது . இதனால் செவிப்பறை அதிர்கின்றது.
நடுச்செவியின் இயக்கம்
:
*நடுச்செவி என்பது டெம்போரல் எலும்பில் அமைந்துள்ள காற்று நிரம்பிய குழிவான பகுதியாகும்.இது செவிக்குழாயின் வழியே மூக்குத் தொண்டைப் பகுதியினுள் திறக்கின்றது.
*நமது வாயை அசைத்தல் , விழுங்குதல் மற்றும் கொட்டாவி விடுதலின் போது செவிக்குழாய் திறப்பதால், செவிப்பறையின் இருபுறமும் அழுத்தமானது சமநிலைப் படுத்தப்படுகின்றது.
*நடுச் செவியில் மூன்று செவிக் குருத்தெலும்புகள் அமைந்துள்ளன.அவை மால்லியஸ் , ஸ்டேப்பிஸ் மற்றும் இன்கஸ் ஆகும் .
*இவற்றுள் மால்லியஸ் செவிப்பறையுடன் இணைந்துள்ளது; ஸ்டேப்பிஸ் நடுச்சுவரில் அமைந்துள்ள நீள்வட்டப் பலகணியுடனும்; இன்கஸ் இவ்விரு எலும்புகளுடனும் இணைந்துள்ளது.
*செவிப்பறையின் அதிர்வுகள் நீள்வட்டப் பலகணியினை அடைகின்றன.செவிப்பறை சுமார் 90 சதுர மி.மீ. பரப்பினையும், ஸ்டேப்பிஸின் அடித்தட்டு 3.2 சதுர மி.மீ. பரப்பினையும் கொண்டுள்ளதால், இந்தக் குருத்தெலும்புகளின் நெம்புகோல் தொகுதி இந்த அழுத்தத்தினை 1.3 மடங்கு அதிகரிக்கின்றது.
*நீள்வட்டப் பலகணியின் அதிர்வுகள் வெஸ்டிபுலார் குழாயில் (vestibular tubes) அடங்கியுள்ள திரவத்தில் அழுத்தத்தினை உண்டாக்குகின்றன.
இந்த அழுத்த அலைகள் நடுக்குழாயினை அடைந்து பேசினார் சவ்வினை அதிர்வடையச் செய்கின்றன.
*நீள்வட்டப் பலகணியின் கீழ்ப்புறமாக அமைந்துள்ள வட்ட வடிவச் சவ்வாகிய வட்டப் பலகணியுடன் செவிப்பறைக் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அழுத்த அலைகள் செவிக்குழாய் (Cochlea) திரவத்தினை அடைகின்றன.
காக்லியாவின் இயக்கம் :
*காக்லியா ஆனது உட்செவி மற்றும் வெஸ்டிபியூல் ஆகியவற்றால் ஆனது.
*உட்செவியின் காக்லியா பகுதி 2.75 சுற்றுகள் கொண்ட குழாய் போன்ற அமைப்புடையது.இதன் நீளம் முழுவதும் பேசினார் மற்றும் ரெய்ஸ்னர் சவ்வினால் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
*நடு அறையில் (ஸ்கேலா மீடியா) உள்திரவமும், மற்ற இரு அறைகளிலும் (ஸ்கேலா வெஸ்டிபுலை, ஸ்கேலா டிம்பனை) சுற்றுத் திரவமும் அடங்கியுள்ளது.