காரைக்கால் அருகில் உள்ள சிறந்த காது கருவி நிலையம் எது ?
March 9, 2021காதைப் பராமரிப்பதன் மூலம் கேட்கும் திறன் இழப்பைத் தவிர்ப்பது எப்படி ?
March 10, 2021
காதில் உள்ள எலும்பு அதிகமாக இருக்குமா?
மனித உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு காதுகளில்தான் உள்ளன.அவை காதுகளில் உள்ள ஸ்டேப்ஸ் எனப்படும் அங்கவடி எலும்பாகும் . இந்த எலும்புகள் அளவுக்கு அதிகமாக
காதில் இருந்தாலும் சிக்கல் ஏற்படலாம்.அங்கவடி எலும்பு மூலமாக வெளியிலிருந்து வரும் சப்தம் அல்லது
ஒலி காதின் உட்பகுதிக்குச் செல்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை ஓட்டோ செலரோஸ’ஸ் என்று கூறுவார்.
இந்த பிரச்சினையானது இளமைப்பருவத்தில் உள்ள வயதினருக்கு ஏற்படுகிறது . காதுகளில் வளரும் அதிகமான எலும்புகளை ஆடியோமெட்ரி மற்றும் இம்பெடான்ஸ் ஆடியோ மெட்ரி மூலம் அங்கவடி (ஸ்டேப்ஸ்) எலும்பில் சிறிய ஓட்டை ஏற்படுத்தப்பட்டு, இதன் மூலம் அதிகப்படியாக வளர்ந்த எலும்பு நீக்கப்படும்.பின்னர் ஓட்டையில் டெப்லான் பிஸ்டன் மூடி வைக்கப்படும் . இதன் மூலம் சத்தம் உள் காதுகளுக்குச் செல்லும். இச்சிகிச்சையானது
கேட்கும் திறனை உடனடியாக உயர்த்தவல்லது.
இத்துடன் சிலருக்கு
டின்னிட்டஸ் எனப்படும் தொடர்பற்ற இரைச்சல் கேட்கும். காதுகளை பாதிக்கும் இப்பிரச்சினை பரம்பரையாக குடும்பத்தினருக்கு தொடர்ந்து வரலாம். காது கேட்பது படிப்படியாகக் குறைவதை இவர்களால் உணர முடியும்.
இந்த வகை நோயாளிகளுக்கு
காது கேட்க உதவும் கருவி பொருத்தினால் இக்கருவி ஓசையை பெருக்குமே தவிர, நோயைக் குணப்படுத்தாது.எனவே இதற்கான
சிகிச்சையை உடனே மேற்கொள்வது நல்லது .
காதின் முக்கியவத்துவத்தையும், அதைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 3ம் தேதி அனைத்துலக காது பராமரிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது .