*சளி அல்லது ஒவ்வாமையின் காரணமாக நடுப்பகுதி
காதிலிருந்து திரவம் வெளியேறுதல் .
*காதில் ஏற்படும் நோய்த் தொற்று அல்லது
ஓடிடிஸ் மீடியா. ஓடிடிஸ் என்பது காதின் நோய்த்தொற்றைக் குறிக்கும் ,மேலும் மீடியா என்பது நடுப்பகுதி என்பது பொருள்.
*காது கால்வாயில் ஏற்படும் தொற்று, வெளிப்புற ஓடிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
*வெளிப்புற காதில் அந்நிய பொருட்களை நுழைத்தல் மற்றும் காதில் ஏற்படும் துளை.
*வெளி அல்லது நடுப்பகுதி காதில் ஏற்படும் சிக்கல்கள்.அதாவது , சிலர் வெளிப்புற காது இல்லாமல் பிறப்பது,மற்றும் சிலருக்கு சிதைந்த காது கால்வாய் இருப்பது.
*நடுப்பகுதி
காதில் உள்ள எலும்புகளில் ஏற்படும் சிக்கல் .
*யூஸ்டாச்சியன் குழாயில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் . (யூஸ்டாச்சியன் குழாயானது நடுத்தர காது மற்றும் மூக்கை இணைக்கும் ஒரு குழாய். யூஸ்டாச்சியன் குழாயானது நடுத்தரக்
காதில் உள்ள திரவத்தை வெளியேற்ற உதவுகிறது.)
*உட்காந்து பகுதியில் ஏற்படும் தீங்கற்ற கட்டிகள்,இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல, ஆனால் வெளி அல்லது நடுக்காதை பாதிக்கும் தன்மை கொண்டது .
*காது கால்வாயில் சிக்கியுள்ள செருமென் அல்லது அழுக்கு .