டைம்பானிக் சவ்வு துளையிடப்படுவதற்கு காரணங்கள் என்ன ?
டைம்பானிக் சவ்வு பல காரணங்களால் ஏற்படுகிறது .
*ஓடிடிஸ் மீடியா (நடுக்காது தொற்று)
நடுக்காது பகுதியில் ஏற்படும்
நோய்த் தொற்றுகளால் காதில் திரவமானது உண்டாகிறது .மேலும் காது பகுதியில் திரவம் குவிந்து, அதன் விளைவாக அழுத்தம் அதிகரித்து காதுகுழாய் கிழிக்க நேரிடும் .
*ஒலி அதிர்ச்சி
அதிகமான சத்தத்தினை கேட்பதால்,அதாவது வெடி சத்தம் ,துப்பாக்கிச் சுடுதல், இடி போன்ற வலுவான ஒலிகளை கேட்பதன் மூலம் ஒலி அலைகள் காதுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் .
*Barotrauma
Barotrauma என்பது நடுக்காது பகுதியில் ஏற்படும் அழுத்தமும் மற்றும் சுற்றுச்சூழல் பகுதிகளில் ஏற்படும் அழுத்தமும் சமநிலையில் இல்லாதபோது காதுக் குழாயில் ஏற்படும் அழுத்தமே Barotrauma எனப்படும் .பரோட்ராமா பொதுவாக காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.
*காதில் நுழையும் அந்நியப் பொருட்கள்
காதில் தேவையில்லாமல் நுழைக்கக்கூடிய குச்சி ,பென்சில் போன்ற பொருட்களால் காதின் செவிப்பறை கிழியக்கூடும் .
*தலையில் ஏற்படும் கடுமையான காயம்
தலையில் ஏற்படும் கடுமையான காயங்கள் மூலம் கிரானியல்
எலும்பு முறிவுகள் ஏற்பட்டு ,அதன் மூலம் நடுக்காது மற்றும் உள் காதுகளின் கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தும் .