Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    திருவாரூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள காது கருவி நிலையம் எது ?
    March 8, 2021
    Hearing-loss-and-Deafness
    காது கேட்கும் திறனை பாதிக்கும் காரணிகள் ?
    March 9, 2021

    காது கருவியின் வகைகள் என்னென்ன ?

    காது கருவிகள் காது கேளாமையை குணப்படுத்தாது ,இது வெளிப்புறத்திலிருந்து காதுக்குள் நுழையும் ஒலியை அதிகமாக்கி தரும் சாதனமாகும் .அனைத்து விதமான செவித்திறன் இழப்புகளுக்கும் ஏற்பட்ட வகையில் காது கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன .

    மினி BTE காது கருவிகள்(JH - D31) :

    இவை காதுக்கு பின்னால் பொறுத்தக்கூடிய சாதனமாகும் .இவற்றில் மினி BTE வகை காது கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன .இவை மிகச் சிறியவை,துல்லியமான ஒலியை தரக்கூடியது , காதுக்குள் எளிமையாக பொருந்தக்கூடியவை.இவை அனைத்து வயதினரும் அணியும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    காதுக்கு பின்னால் (BTE) கேட்கும் கருவிகள் :

    பி.டி.இ (B.T.E) காது கேட்கும் கருவிகள் மற்ற காது கேட்கும் கருவிகளை விட நீண்ட காலம் நீடிக்கும் தன்மை கொண்டது, ஏனெனில் மின் கூறுகள் காதுக்கு வெளியே அமைந்துள்ளன.காது கருவியிலிருந்து வரும் ஒலியானது மின்சார ரீதியாகவோ அல்லது ஒலியியல் ரீதியாகவோ காதுக்குள் அனுப்பப்படுகிறது.

    இந்த சாதனங்கள் திறன்மிக்க மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய சாதனமாகும் .இவை குழந்தைகளிடையே மிகவும் பரிட்சயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .

    ஐ.டி.சி கேட்கும் கருவிகள்:

    இந்த வகை காது கருவிகள் பெரும்பாலும் செவித்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு நேரடியாக பொருத்தப்படுகிறது .இவை மிகவும் மென்மையான ,காதுக்குள் எளிதாக பொருந்தும் தன்மை உடையது .இது காது கால்வாயின் வெளிப்புற பகுதியை முழுமையாக நிரப்புகிறது .

    மேலும் இந்த கருவிகள் சிறந்த ஒலி தரத்தை கொண்டு ,காதுக்குள் செல்லும் ஒலியினை அதிகப்படுத்தி நன்றாக ஒலியினை கேட்க வைக்க உதவுகிறது .

    காது கால்வாயில் முழுமையாக பொருத்தப்படும் கருவி (CIC):

    இந்த வகை காது கருவியானது காது கால்வாயில் முழுமையாக பொருத்தப்படும் .இவை யாராலும் எளிதில் காண முடியாத அளவுக்கு காதுக்குள் பொருத்தப்படுகிறது .

    மிகச் சிறிய வடிவில் உள்ள இந்த காது கருவியானது அதிக திறன் கொண்டது .சுற்றுப்புறத்திலுள்ள ஒலியை இரட்டிப்பாக்கி தர வல்லது .

    எலும்பு கடத்தல் கேட்கும் கருவிகள்:

    இந்த வகை காது கருவியானது செவிப்புலன் கருவிகளை பொறுத்த முடியாதவர்களுக்கும்,கடத்தும் செவிப்புலன் இழப்பு உள்ளவர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த கருவியானது மாஸ்டாய்டு எனப்படும் அதிர்வுறும் பகுதிக்கு எதிராக வைக்கப்படுகிறது.

    நாம் கேட்கும் ஒலிகள் அல்லது அதிர்வுகள் மாஸ்டாய்ட் எலும்பு வழியாக, காக்லியாவிற்குச் செல்கின்றன.இதன் மூலம் தெளிவான ஒலியை நம்மால் கேட்க முடியும் .