ஆடிட்டரி செயலாக்க கோளாறுகள்:
மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை புரிந்துகொள்வதில் ஏற்படும் சிக்கல் மற்றும்
ஒலிகள் எங்கிருந்து வருகின்றன என்பதில் ஏற்படும் குழப்பம் போன்றவை ஆடிட்டரி செயலாக்க கோளாறுகளால் ஏற்படக்கூடியதாகும். மேலும் ஒலியில் உள்ள தகவல்களைச் செயலாக்குவதில் மூளைக்கு சிக்கல்கள் ஏற்படும்போது,அந்நிலையில் ஆடிட்டரி செயலாக்க கோளாறுகள் ஏற்படுகிறது .
கடத்தும் செவிப்புலன் இழப்பு:
வெளிக்காது மற்றும் நடுக்காது பகுதியில் பாதிப்புகள் ஏற்படும்போது கடத்தும்
செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது .உள்காது பகுதியில் ஒலிகள் செல்வதில் ஏற்படும் சிக்கல்கள் அல்லது குறுக்கீடுகள் .
கடத்தும் செவிப்புலன் இழப்பானது
காதில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ,
காதுக்குழாயில் ஏற்படும் பாதிப்பு ,காது கால்வாயில் திரவம் உருவாகுதல் மற்றும் நடுக்காது பகுதியில் உண்டாகும் அசாதாரண
எலும்பு வளர்ச்சி போன்ற காரணங்களாலும் கடத்தும் செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது .