Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
Ear-deafness
காது மந்தமாக இருக்க காரணம் என்ன?
February 17, 2021
coggled-ear
காது அடைப்பு எதனால் ஏற்படுகிறது ? காது அடைப்பை எப்படி சரிசெய்வது?
February 18, 2021

செவியை பாதுகாக்க நாம் செய்யக்கூடியதும் ,செய்யக்கூடாததும் ?

செவியை பாதுகாக்க செய்யக்கூடியது:

1.காதுப் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் குளிக்கும்போது காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.காதில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ,அவரின் ஆலோசனைப்படி காது சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

3.அதிக இரைச்சலான இடங்களில் பணிபுரிபவர்கள் செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் பொருத்திக்கொள்ளுதல் நல்லது .

4.சிலருக்கு குளிர்காலங்களில் காதில் வலி ஏற்படுவது உண்டு ,இந்நிலையில் காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடுவது நல்லது .இதனால் காது வெதுவெதுப்பாகவும் ,காதில் தொற்று ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். .

5.காது, மூக்கு, தொண்டை இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை .எனவே இவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் அது நமக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் .எனவே இப்பகுதிகளை பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியம் .

6.அதிக சத்தம் கேட்பதை தவிர்த்தல் மற்றும் விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்வது அவசியமாகும் .

7.அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்ப நல்லது.

8.நம் உடலில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் .

9.காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டியது அவசியமாகும் . குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது .

செவியை பாதுகாக்க செய்யக்கூடாதவை :

1.காதுக்குள் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்தவொரு பொருள்களையும் உள்ளே விட்டு காதை சுத்தம் செய்ய கூடாது.(இயற்கையாகவே நம்முடைய காதில் வாக்ஸ் எனும் திரவம் சுரந்துகொண்டிருக்கிறது ,இது நம் காதிற்குள் சேரும் அழுக்குகளை தானாகவே வெளியேற்றுகிறது).

2.காதிற்குள் காய்ச்சிய எண்ணையை ஊற்றுவதை அறவே தவிர்த்தல் நல்லது .

3.காது வலி ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறாமலே காது மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் .

4.காது குடைவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் ,ஏனெனில் காது குடைவதன் மூலம் செவிப்பறை கிழிந்து போகும் அபாயம் நேரிடும் .

5.காதிலுள்ள உரோமங்களை சுத்தம் செய்வதையோ அல்லது வெட்டி எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் . (காதிலுள்ள உரோமங்கள் தூசி ,பூச்சி போன்ற அந்நிய பொருட்களை காதிற்குள் நுழைய விடாமல் தடுக்கின்றன.)

6.அதிக அளவில் வெளிவரும் சத்தத்தை (இடி ,பட்டாசு) கேட்பது ,அதிக சத்தம் வரும் தொழிற்சாலைகளில்(செவிப்பாதுகாப்பு அடைப்பான்களை பயன்படுத்துதல்) வேலைசெய்வது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது .

7.காது கேளாதவர்கள் மற்றவர்கள் பயன்படுத்தும் காது கருவியை பயன்படுத்தக் கூடாது .

8.மூக்கை வேகமாக சீந்துதலோ அல்லது தும்முவதோ கூடாது.(மூக்கை வேகமாக சீந்துவதின் மூலம் தொண்டையிலும் ,மூக்கிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்கு சென்று பாதிப்புக்குள்ளாக்கும் ).

9.காதில் இயர்போனை எப்போதும் மாட்டிக்கொள்ளுதல் மற்றும் அதிக சத்தத்தோடு பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது .

10.காதுகளில் அழுக்கு சேர்ந்து விட்டால், தாமாகவே இயர் பட்ஸ் (ear buds) கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் .