Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    headset-with-ear
    காதுகளில் நீண்ட நேரம் இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்தலாமா?
    February 22, 2021
    Rinne-test-for-ear
    செவிப்புலன் இழப்பை கண்டறிவதற்கான ரின்னே(RINNE TEST) சோதனை?
    February 23, 2021

    செவித்திறன் இழப்பை கண்டறியும் வெபர் (Weber test) சோதனை ?

    வெபர் சோதனையானது கடத்தும் மற்றும் சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்புகளை மதிப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.

    கடத்தும் செவிப்புலன் இழப்பு:

    ஒலி அலைகளானது நடுக்காதுப்பகுதியின் வழியாக உட்காது பகுதிக்கு செல்லும்போது ஏற்படும் தடைகள் ,அதாவது கடத்துதலில் ஏற்படும் இழப்பு கடத்து செவிப்புலன் இழப்பு ஆகும் .இந்த இழப்பானது காது கால்வாய் ,காதுக்குழாயில் ஏற்படும் பாதிப்புகளால் நிகழ்கிறது.கடத்தும் காது கேளாமை தற்காலிக அல்லது நிரந்தர செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தும்.

    *நடுத்தர காதில் திரவம் வடிதல் .
    *நடுத்தர காதுக்குள் சிறிய எலும்புகள் பாதிக்கப்படுதல்.
    *காதில் ஏற்படும் தொற்று
    *காதுக்குழாயின் அமைப்பு
    *நடுக்காதில் ஏற்படும் அழற்சி

    சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு:

    சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பானது காதுகளின் சிறப்பு நரம்பு மண்டலத்தில் (எந்த பகுதியிலும் ஏற்படக்கூடிய )சேதம் ஏற்படும்போது சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது.இது பொதுவாக உயர் அதிர்வெண்களை கொண்ட சத்தத்தை கேட்பது மற்றும் வயது முதிர்வின் காரணமாகவும் ஏற்படுகிறது. சென்சார்நியூரல் காது கேளாமை பொதுவாக நிரந்தரமானது, மேலும் ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் ஏற்படக்கூடியது.

    வெபர் சோதனைகளை பயன்படுத்தி கீழ் வரும் செவிப்புலன் பாதிப்புகளை கண்டறியலாம் ..

    *ஓட்டோஸ்கிளிரோசிஸ் (காதில் உள்ள சிறிய எலும்புகள் சேதம் )
    *காதுகளில் ஏற்படும் நரம்பு காயம்
    *காது துளைத்தல்
    *காது கால்வாயில் மெழுகு
    *காதில் ஏற்படும் தொற்று

    வெபர் சோதனை செய்வது எப்படி?

    வெபர் சோதனையானது இரு காதுகளிலும் செவித் திறன் தன்மையை கண்டறிய பயன்படுகிறது.
    *வெபர் சோதனையின் போது மருத்துவர் ஒரு இசைக்கவையை (tuning Fork)அதிரச்செய்து உங்கள் தலையின் நடுவில் வைப்பார்.
    *இதன் மூலம் ஒலியானது எங்கு சிறப்பாக கேட்கப்படுகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள் (இடது காது, வலது காது அல்லது இரண்டும் சமமாக).


    வெபர் சோதனையின் முடிவுகள் ?

    *வெபர் சோதனையின் மூலம் கடத்தும் இழப்பு அசாதாரண காதில் ஒலியைக் உருவாக்கும்.
    *சென்சோரினல் இழப்பு சாதாரண காதில் ஒலியைக் கேட்கும்.
    *இயல்பான செவிப்புலன் இரண்டு காதுகளிலும் சமமான ஒலியை உண்டாகும் .