பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்
கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.
பெரியவர்களை பொறுத்தவரை, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி
தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும்.
காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் மூளையில் சீழ் கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.