Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
தஞ்சாவூரில் உள்ள சிறந்த காது கருவி மையம் எது?
February 8, 2021
stapedectomy-surgery
காது கேளாமைக்கான சிகிச்சை முறைகள் என்ன ?
February 8, 2021

காது கருவி என்றால் என்ன?

ஒருவருக்குப் பேச்சும் ,மொழியும் வருவதற்கு முதல் காரணமாக விளங்குவது செவித்திறன் ஆகும் . பொதுவாக ஒருவர் பிறந்து வளர்ந்த பிறகு அவருக்கு காது கேட்காத நிலை ஏற்பட்டால், அப்போது அவருக்குக் காது கேட்க உதவுவதற்காக பொருத்தப்படும் கருவி காது கருவி ஆகும் . காது கருவியானது இருவகையான முறைகளில் செயல்படுகிறது .ஒன்று வெளிக்கருவி மற்றொன்று உட்கருவி .

வெளிக்கருவி

காது கேட்கும் திறனை அதிகரிக்க நம் காதுக்கு பின்புறம் கருவி ஒன்றை வெளியில் தெரிவது போல் பயன்படுத்துவதால் இதனை காது வெளிக்கருவி என்கிறோம் .இக்கருவியில் மைக்ரோபோன், ஒலியை உள்ளே அனுப்பும் அமைப்பு(Transmitter), ஒலிபெருக்கி ,பேட்டரி போன்றவை அடங்கியுள்ளன .இவற்றில் மைக்ரோபோன்(microphone) ஆனது நம் கேட்கும் ஒலியைக் கிரகிக்கிறது மற்றும் ஒலிபெருக்கி(speaker) ஆனது கேட்கும் ஒலியின் அதிர்வுகளை அதிகப்படுத்தி அதனை டிஜிட்டல் சிக்னல்களாக(Digital signal) மாற்றுகிறது. இந்த சிக்னல்கள் கம்பிபோல் இருக்கும் ஓர் அலைபரப்புக் கருவி (Transmitter) வழியே காதின் உட்கருவிக்கு அனுப்பிவைக்கிறது.

உட்கருவி ( உட்பதியக் கருவி):

காதின் உட்கருவியானது ஒலிவாங்கி, ஸ்டிமுலேட்டர் மற்றும் காந்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது .காதின் உட்கருவியை , காதின் பின்புறம் தோலுக்கு அடியில் அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தி ,பின்னர் ஸ்டிமுலேட்டரை உட்காதில் உள்ள நத்தை எலும்பில் (Cochlea) பொருத்திவிடுகின்றனர். அலைபரப்பி மூலம் வரும் ஒலிகளை, ஒலிவாங்கி கவர்ந்து ஸ்டிமுலேட்டருக்கு அனுப்பிவைக்கிறது. பின்னர் ஸ்டிமுலேட்டரானது டிஜிட்டல் சிக்னல்களை மின்சிக்னல்களாக மாற்றி, செவி நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது. அங்கே ஒலிகள் பகுக்கப்பட்டு கேட்கும் திறன் முழுமையாக செயலுக்கு வருகிறது.