லேசான காது கேளாமைக்கான காரணங்கள் ?
செவிப்புலன் இழப்பு லேசாக இருக்கும் பட்சத்தில் அதனை கண்டறிந்து ,அதற்காக
சிகிச்சை மேற்கொள்ளும்போது எதிர்காலத்தில் செவிப்புலனானது நன்முறையில் செயல்பட்டு வாழ்வை சீராக்கும்.மேலும்,செவிப்புலன் இழப்பு லேசானது என கருதி விட்டுவிடுவோர் ,காலப்போக்கில் நிரந்தர செவித்திறன் இழப்புக்கு ஆளாகுவார்.லேசான காது கேளாமையானது பல காரணங்களால் நிகழ்கிறது .
காது தொற்று :
காதில் ஏற்படும் தொற்றுகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை என அனைத்து வயதினரையும் பாதிக்கும் .காதில் அரிப்பு ,
அழற்சி ,திரவம் வெளியேறுதல் ,
காது வலி போன்ற காரணங்களால் லேசான காது கேளாமையானது ஏற்படும் .
நடுக்காது பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் : நடுக்காது பகுதியில் சிறிய எலும்புகள் சேதமடைவதாலும் அல்லது எலும்புகள் செயலிழப்பதாலும் காது கேளாமையானது ஏற்படுகிறது .இதன்மூலம் உள்காது நரம்பின் வழியாக மூளைக்கு ஒலியை எடுத்து செல்வதில் சிக்கல் .மேலும் ,
மீனியர்ஸ் நோய், ஒலி நரம்பியல் மற்றும் தலை அதிர்ச்சி ஆகியவை செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தும் காரணியாகும்.
காதுக்குழாய் (செருமென்):
காதுக்குழாயில் ஏற்படும் பாதிப்புகள் லேசான காது கேளாமைக்கு வழிவகுக்கும் .காதுக்குழாயில் ஏற்படும் தொற்றின் காரணமாக திரவம் சேர்தல் ,காதுக்குழாயில் ஏற்படும்
அழற்சி ,வெளிப்பொருட்கள்
காதில் சென்று அடைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் லேசான காது கேளாமை ஏற்படுகிறது .
அதிக சத்தத்தின் வெளிப்பாடு மற்றும் வயது முதிர்வு ஆகியவை லேசான செவிப்புலன் இழப்புக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.