1.காது கேட்கும் திறனை அதிகரிக்க நாம் அதிக
இரைச்சல் உள்ள இடங்களில் இருப்பதை தவிர்த்தல் நல்லது .
2.அதிக சத்தம் நிறைந்த இடங்களில்
காது அடைப்பானை பயன்படுத்தி தேவையான அளவு சத்தத்தை கேட்டல்.
3.
காது கேட்கும் திறனை அதிகரிக்க அதிக அளவு கொழுப்புகள் மற்றும் வெண்சர்க்கரை இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
4.இயற்கை முறையில் காது கேட்கும் திறனை அதிகரிக்க யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது ,உடற்பயிற்சி ஆகியவை காதுகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யும் .
5.வைட்டமின் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுதல் .
6.காது கேட்கும் திறனை அதிகரிக்க கவனக்கூர்மையை அதிகரிக்கக்கூடிய பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது (சதுரங்கம் மற்றும் கேரம் ).
7.காது மெழுகு நமது
காதை விபத்துகளில் இருந்து பாதுகாக்கவே உள்ளது.
எனவே அதனை சுத்தம் செய்வதாக நினைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
8.
காதில் பென்சில் ,பேனா போன்ற பொருட்களை கொண்டு
குடைவதை முழுமையா தவிர்க்க வேண்டும் .
9.தொடர்ந்து அதிக சத்தத்துடன் இசை அல்லது பாடல்கள் கேட்பதையோ ,பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும்
.